NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருது வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருது வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு
    டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருது வழங்க உச்சநீதிமன்றம் தடை

    டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருது வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 16, 2024
    06:50 pm

    செய்தி முன்னோட்டம்

    குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருதுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    புகழ்பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் வி. சீனிவாசன், டிஎம் கிருஷ்ணா வெளியிட்ட கட்டுரைகளில் தனது பாட்டியை அவமரியாதை செய்யும் வகையில் எழுதியதாகக் கூறி மனுவைத் தொடர்ந்த நிலையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி தலைமையிலான பெஞ்ச், விருது வழங்குவதற்கு முன் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

    விருது பெற்றவர் அவமரியாதை செய்ததாகக் கூறப்படும் ஒரு நபரின் பெயரில் ஒரு விருதை வைத்திருக்க முடியாது என்று கூறி இந்த உத்தரவை பிறப்பித்தது.

    உத்தரவு

    உச்ச நீதிமன்ற உத்தரவின் விபரம்

    இந்த விவகாரம் முழுமையாக தீர்க்கப்படும் வரை விருது பெறுபவராக தன்னை முன்னிலைப்படுத்த வேண்டாம் என்று டிஎம் கிருஷ்ணாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    டிஎம் கிருஷ்ணாவின் கட்டுரைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியை கவுரவிக்கும் விதமாக அமைந்ததாக நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

    எனினும், கிருஷ்ணாவுக்கு தடை விதித்த நீதிமன்றம், இந்த உத்தரவு அவரது இசை திறன்களையோ அல்லது 96 ஆண்டு பழமையான நிறுவனமான தி மியூசிக் அகாடமி விருதை வழங்குவதற்கான முடிவையோ பிரதிபலிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது.

    மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கட்ராமன், டி.எம்.கிருஷ்ணா, எம்.எஸ்.சுப்புலட்சுமியை புனிதமான பார்பி பொம்மை என்று அழைத்தது உட்பட பெண் வெறுப்பு கருத்துகளை தெரிவித்ததாக குற்றம் சாட்டி இருந்ததது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா
    விருது

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உச்ச நீதிமன்றம்

    கனிமங்கள் மீதான ராயல்டி நிலுவைத் தொகையை வசூலிக்க முடியும்: உச்ச நீதிமன்றம் மாநிலங்கள்
    பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை கொல்கத்தா
    பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டாஸ்க் போர்ஸ்: உச்சநீதிமன்றம்  மருத்துவம்
    நாளை, ஆகஸ்ட் 21, நாடு முழுவதும் பாரத் பந்த்: தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் வேலைநிறுத்தம்

    இந்தியா

    ஜனவரி 2025 முதல் இந்தியாவில் விலை உயர்வை அறிவித்தது கியா மோட்டார்ஸ் கியா
    இந்தியாவில் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு; யுபிஎஸ் அறிக்கையில் தகவல் வணிகம்
    ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் என தகவல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக INDIA கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் மாநிலங்களவை

    விருது

    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழக அரசு
    தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு மத்திய அரசு
    'பசுமை புரட்சியின் தந்தை' விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் காலமானார் சென்னை
    தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025