Loading...
விஜய்யின் மகன் முதல் சூர்யாவின் மகள் வரை... திரைக்குப் பின்னால் புதுப் பாதை
பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் தமக்கெனத் தனிப் பாதையை உருவாக்கி வருகின்றனர்

விஜய்யின் மகன் முதல் சூர்யாவின் மகள் வரை... திரைக்குப் பின்னால் புதுப் பாதை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
05:20 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியத் திரையுலகில் பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் வழக்கமான கதாநாயகன் அல்லது கதாநாயகி பாதையைத் தேர்ந்தெடுக்காமல், கேமராவுக்கு பின்னால் இயக்கம், தயாரிப்பு மற்றும் இசைத் துறைகளில் தமக்கெனத் தனிப் பாதையை உருவாக்கி வருகின்றனர். நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், வெளிநாட்டில் திரைப்படத் தயாரிப்பு பயின்று பல குறும்படங்களை உருவாக்கியவர். தந்தை வழியில் நடிகராகாமல், 'சிக்மா' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரைப் போலவே பல நட்சத்திர வாரிசுகள் திரைக்கு பின்னால் பணியாற்றி வருகின்றனர். இதோ ஒரு பார்வை

நட்சத்திர வாரிசுகள்

திரைக்குப் பின்னால் கலக்கும் தென்னிந்திய நட்சத்திர வாரிசுகள்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் மகன் அகிரா நந்தன், நடிப்பில் கவனம் செலுத்தாமல் இசையமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் மகளான 23 வயதான அனந்திதா, மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' பாகம் 1 & 2 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். மேலும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பங்காற்றியுள்ளார்.

நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகளான தியா, பெண் ஒளி அமைப்பாளர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவண-நாடகத்தில் பணியாற்றித் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ADVERTISEMENT