LOADING...
Baahubali3 — The Ultimate: பாகுபலி மூன்றாம் பாகம் சாத்தியமாகும் என ராஜமௌலி உறுதி
பாகுபலி மூன்றாம் பாகம் சாத்தியமாகும் என ராஜமௌலி உறுதி

Baahubali3 — The Ultimate: பாகுபலி மூன்றாம் பாகம் சாத்தியமாகும் என ராஜமௌலி உறுதி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2025
06:01 pm

செய்தி முன்னோட்டம்

பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷோபு யார்லகடா, சமீபத்தில் இந்த இதிகாச காவியத்திற்கான தினசரி தயாரிப்பு செலவை வெளியிட்டார். Gulte Pro-விடம் பேசிய அவர், ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கும் லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறினார். உலகளாவிய பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் இரண்டு பகுதிகளையும் இணைத்து ஒரே படமாக அக்டோபர் 31 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது- Baahubali The Epic.

பட்ஜெட் 

ராஜமௌலி சில அம்சங்களில் சமரசம் செய்ய ஒப்புக்கொண்டார்

படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் தான் நடத்திய விவாதங்கள் குறித்தும் யார்லகடா பகிர்ந்து கொண்டார். சில சமயங்களில் பட்ஜெட்டிற்காக சமரசங்களுக்கு ராஜமௌலி ஒப்புக்கொண்டாலும், ஆனால் எப்போதும் அப்படி இல்லை என்று அவர் கூறினார். "சில நேரங்களில், 'நான் இதில் சமரசம் செய்ய மாட்டேன்' என்று அவர் கூறிய சந்தர்ப்பங்கள் உண்டு" என்றார். தனது கூற்றை விளக்க, மனோகரி பாடல் குறித்து ஒரு சம்பவத்தை அவர் மேற்கோள் காட்டினார். அவர்கள் ஆரம்பத்தில் ஒரு பெரிய நட்சத்திரத்தை புக் செய்ய திட்டமிட்டனர், ஆனால் இறுதியில் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக அதை மாற்றிவிட்டதாக கூறினார்.

தயாரிப்பு விவரங்கள்

தயாரிப்பு செலவுகள் குறித்தது பகிர்ந்து கொண்ட யர்லகடா

"நாங்கள் ஒரு நாளைக்கு ₹25-30 லட்சம் செலவிட்டோம், அது 30-40 நாள் ஷூட்டிங் அட்டவணையை உள்ளடக்கியது" என்று யார்லகடா தெரிவித்தார். "இடையில், செலவுகளை பற்றி விவாதிக்க ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தோம். இது நான் குறிப்பிடும் படப்பிடிப்பு தயாரிப்பு மட்டுமே, CGI அல்லது பிற செலவுகள் சேர்க்கப்படவில்லை." "குழுவால் அதிகம் சமரசம் செய்ய முடியாது, எனவே அவர்கள் சில "இறுக்கங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன்" படப்பிடிப்பைத் தொடர்ந்தனர் என்று அவர் கூறினார்.

மூன்றாம் பாகம்

மூன்றாம் பாகம் சாத்தியமாகும் என ராஜமௌலி உறுதி

பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தற்போது அந்த இரு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி- தி எபிக்' என்ற முழு நீள படத்தை வெளியிட தயாராகி வருகிறார். இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பாகுபலி படத்தின் இறுதி பாகம், அதாவது மூன்றாம் பாகம் என்றாவது சாத்தியமாகும் என கூறியுள்ளார். அதோடு அதன் பெயர் 'Baahubali3 — The Ultimate எனவும் கூறினார். இந்த செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.