Page Loader
நடிப்புத்தொழிலுக்கு முழுக்குப்போட போகும் நயன்தாரா?
நடிப்புக்கு டாட்டா சொல்ல போகிறாரா நயன்தாரா?

நடிப்புத்தொழிலுக்கு முழுக்குப்போட போகும் நயன்தாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2023
09:45 am

செய்தி முன்னோட்டம்

'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா, விரைவில் நடிப்பு தொழிலுக்கு முழுக்கு போடப்போகிறார் என பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. நயன்தாரா தற்போது, அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுடன் இணைந்து, 'ஜவான்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். அதோடு, ஜெயம் ரவியுடன், 'இறைவன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு, நடிப்புக்கு ஒய்வு தரும் எண்ணத்தில் நயன்தாரா இருக்கிறார் என பேச்சு. நடிப்பதில் இருந்து விலகினாலும், தானும், விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்தும், 'ரவுடி பிக்ச்சர்ஸ்' மூலம், படத்தயாரிப்பில் கவனம் செலுத்த போவதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா

நடிப்பில் இருந்து விலக காரணம் என்ன?

கடந்த வருடம், விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. அதன் பின்னர், வாடகை தாய் மூலமாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். 'உயிர்', 'உலகம்' என பெயரிடப்பட்டுள்ள அந்த இரட்டை குழந்தைகளையும் கவனிப்பதற்காக, இந்த முடிவை நயன்தாரா எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த செய்திகள் குறித்து நயன்தாரா தரப்பிலோ, விக்னேஷ் சிவன் தரப்பிலோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்து இயக்க போகும் படத்திலும், நயன்தாரா நடிக்க போவதாக பேச்சு எழுந்துள்ளது. அஜித் படம் கை நழுவி போனதை அடுத்து இந்த படத்தை விக்கி விரைவில் தொடங்குவார் எனவும் செய்திகள் கூறுகின்றன.