மறைந்த பாடகர் SPB -யின் பெயரில் சாலை அறிவிப்பு; முதல்வருக்கு நன்றி கூறிய SPB சரண்
செய்தி முன்னோட்டம்
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 4வது நினைவு தினம் நேற்று முன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அவரது சமாதியில் ரசிகர்கள் பலர் நேரில் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் எஸ்.பி.பியின் நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.#SPB… pic.twitter.com/UuwwR1m1E0
— M.K.Stalin (@mkstalin) September 25, 2024
நன்றி
SPB சரண் நன்றி தெரிவித்தார்
முன்னதாக தன்னுடைய தந்தை எஸ்.பி.பி நினைவை போற்றும் வகையில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் தெரு பகுதியை எஸ்.பி.பி தெரு என பெயர் மாற்றம் செய்ய மகன் SPB சரண் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
தற்போது அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதற்கு SPB சரண் நன்றி தெரிவித்துள்ளார்.
SPB சரண் வெளியிட்ட வீடியோ பதிவில் தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசிற்கும், முதலமைச்சருக்கும் நன்றிகளை கூறினார்.
இதற்கு துணை நின்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஸ்வாமின்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு நிர்வாகத்தினருக்கு தனது நன்றிகளை அவர் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | முதலமைச்சருக்கு எஸ்.பி.பி. சரண் நன்றி!
— Sun News (@sunnewstamil) September 26, 2024
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகரின் முதன்மை சாலைக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ என பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி… pic.twitter.com/Y7TepjlLR5