ட்ரெண்டிங் வீடியோ: குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயன்
நேற்று(பிப்.,17 ) பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், இன்று தனது குடும்பத்துடன், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்ததாகவும், பின்னர், கோவிலுக்கு வெளியே, அவருடன் செல்பி எடுக்க அவர் ரசிகர்கள் சூழ்ந்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவெளியில் தனது குழந்தைகளை அதிகம் காட்டாத நடிகர் சிவகார்த்திகேயன், முதல் முறையாக தனது மகனுடன் வந்த வீடியோ, தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், நேற்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு, மாவீரன் படத்தின் பாடத்தின் பாடல் வெளியானது. அனிருத் குரலில் வெளிவந்த அந்த பாடலும், யூடியூபில் வைரல் ஆகி வருகிறது.