Page Loader
ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் 'அயலான்'

ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் 'அயலான்'

எழுதியவர் Sindhuja SM
Feb 10, 2024
06:15 pm

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயனின் சமீபத்திய வெளியீடான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் 'அயலான்', சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியான 'அயலான்' திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை அப்படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் சமீபத்தில் அறிவித்தனர். இப்படத்தில் மற்றுமொரு தூணாக இருந்த VFX காட்சிகளை, இந்தியாவின் PhantomFX நிறுவனம் உருவாக்கி இருந்தது. தற்போது அடுத்த பாகத்திற்கும் அதே நிறுவனத்துடன் 'அயலான்' படக்குழு ஒப்பந்தமிட்டுள்ளது. இந்நிலையில், சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான 'அயலான்', சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஓடிடியில் வெளியானது 'அயலான்'