
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் - ஏலியன் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் சிவகார்த்திகேயன்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் இன்று(டிச.,25) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் ஏலியன் மாதிரி பொம்மை புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் 'அயலான்' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சயின்ஸ் பிக்க்ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வைரல் போஸ்ட்
#MerryChristmas to all 😇#AyalaanPongal pic.twitter.com/Rk8CzUdWHN
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 25, 2023