நடிகர் சிவகார்த்திகேயனின் செயலினால் குவியும் பாராட்டுக்கள்
தனது தனி திறமையின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவருக்குத் தொடர்ந்து கிடைத்த மக்களின் ஆதரவினால் சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தார். இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்த மெரினா படத்தில் இவர் கதாநாயகனாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்த படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், ஹீரோ, டாக்டர், டான் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். அதிலும் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த டாக்டர் படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயனின் கேரியரில் 100 கோடி வசூல் செய்த திரைப்படம் இதுவாகும்.
பிரின்ஸ் பட தோல்விக்கு சிவகார்த்திகேயன் நஷ்டஈடு
இந்நிலையில் கடந்த தீபாவளி தினத்தையொட்டி பிரின்ஸ் திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியானது. ஆனால் அந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. எனவே அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சிவகார்த்திகேயன் அவர்கள் தயாரிப்பாளருடன் சேர்ந்து பொறுப்பேற்றுள்ளாராம். பிரின்ஸ் படத்தினால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் சுமார் ஆறு கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் பாதி பணத்தை நஷ்டஈடாக இவர் கொடுத்துள்ளார். இதுபோன்று முன்னணி நடிகர் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து நஷ்டத்தில் பங்கேற்பது ஒரு பாராட்டிற்குரிய விஷயம் என அனைவரும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகிறார்கள்