Page Loader
வெளியானது அயலான் பட ரிலீஸ் அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 
தீபாவளிக்கு வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம்

வெளியானது அயலான் பட ரிலீஸ் அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

எழுதியவர் Siranjeevi
Apr 24, 2023
11:38 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் பட நடிகரான சிவகார்த்திகேயன் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் நிலையில் எப்பொழுது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம், இந்த தீபாவளிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் சிவகார்த்திகேயனுடன் வேற்றுகிரகவாசி நிற்கும்படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் அயலான் படக்குழுவினர்கள் தெரிவிக்கையில், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். தொடர்ந்து, வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டு உள்ளது எனத்தெரிவித்துள்ளனர். மேலும், ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக இப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.