சரத்பாபு உயிரோடு தான் இருக்கிறார் - சகோதரி அளித்த விளக்கம்!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த புகழ்பெற்ற நடிகரான சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அவர் இறக்கவில்லை, அந்தத் தகவல் பொய்யானது என சரத்பாபு குடும்பத்தினர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். இதுகுறித்து, சரத்பாபுவின் சகோதரி மற்றும் உதவியாளர் தெரிவிக்கையில், நடிகர் சரத்பாபு குணமடைந்து வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவு, மறைந்ததாக கூறப்படும் செய்திகள் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டதாகவும், விரைவில் குணமடைந்து பத்திரியாளர்களிடம் பேசுவார் என நம்புகிறேன். சமூக வலைத்தளங்களில் வரும் எதையும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.