Page Loader
'பத்து தல' படத்தின் வெற்றிக்கு பாண்டிச்சேரி ரசிகர்கள் செய்த காரியம்
சிம்புவுக்காக அவரின் ரசிகர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை வரவழைக்கிறது

'பத்து தல' படத்தின் வெற்றிக்கு பாண்டிச்சேரி ரசிகர்கள் செய்த காரியம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 28, 2023
07:15 pm

செய்தி முன்னோட்டம்

சிம்பு நடிப்பில், வெளியாகிவிற்கும் 'பத்து தல' படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச்-25 முதல் இப்படத்தின் முன்பதிவுகள் துவங்கி விட்டது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. விழாவின் போது, நடிகர் சிம்பு, TR மற்றும் ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதோடு, இன்று, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை வெளியிட்டனர். அதனை, இப்படத்தினை தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்திற்கு காலை 4 மணி காட்சிகள் இல்லை எனவும், 8 மணிக்கு தான் முதல் காட்சிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு ரசிகர்கள்

'பத்து தல' படத்தின் வெற்றிக்காக சிம்பு ரசிகர்கள் நற்பணி

இந்நிலையில், சிம்புவின், பத்து தல படம் வெற்றி அடைய வேண்டுமென்று, பாண்டிச்சேரியில் இருக்கும் சிம்புவின் ரசிகர்கள் செய்துள்ள நெகிழ்ச்சியான காரியம், இணையத்தில் வைரலாகி வருகிறது. 'புதுவை சிம்பு தலைமை மன்றம்' சார்பாக, சினேகா முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதோடு, படம் வெளியாகும் அன்று, அந்த காப்பகத்தின் குழந்தைகள் அனைவருக்கும் பேனா, பென்சில் மற்றும் நோட்புத்தகம் வழங்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது போக, படம் வெளியாகும் அன்றும், ரசிகர் மன்றத்தினர் அனைவருக்கும் இனிப்பும், உணவும் வழங்க போவதாகவும் செய்திகள் கூறுகின்றன.