நடிப்பு வேண்டாம், மாற்றுத்துறையைத் தேர்வு செய்த திரையுலக நட்சத்திரங்களின் உடன்பிறப்புகள்!
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் ஒரு நடிகர் ஒரு சில வெற்றி படங்களில் நடித்து பிரபலமானதும், அவரின் உடன்பிறப்புகளும் அதே பாதையை தேர்வு செய்வது தான் வழக்கம். ஆனால், விதிவிலக்காக, வேறு தொழில்பாதையில் சென்று, அதில் வெற்றிகண்ட உடன்பிறப்புகளும் உண்டு. அவர்களை பற்றி சிறிய தொகுப்பு.
கமல்ஹாசன்- சாருஹாசன் -சந்திரஹாசன்: கமல்ஹாசன் இவர்களில் இளையவராகவே இருந்தாலும், மூத்த சகோதரர்கள் இருவரும் சினிமாவில் நடிக்கவில்லை. சாருஹாசன் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், அவர் முழுநேர வழக்கறிஞராகவே இருந்தார். சந்திரஹாசனும் வழக்கறிஞராகவே பணியாற்றினார். அதன்பின்னர், கமலின் தயாரிப்பு நிறுவனத்தில் கவனம் செலுத்த துவங்கினார்.
அஜித்குமார்- அனில்குமார்: அச்சுஅசல் அஜித் போலவே தோற்றமளிக்கும் அனில்குமார், அஜித்தின் இளைய சகோதரன் ஆவார். இவர் தொழில்நுட்ப துறையில் பிசினஸ் செய்து வருகிறார்.
card 2
வேறு துறைகளில் சாதித்துக்கொண்டிருக்கும் நட்சத்திர உடன்பிறப்புகள்
சூர்யா-கார்த்தி -பிருந்தா: அண்ணன்கள் இருவரும் நடிப்பில் கலக்கி கொண்டிருக்க, தங்கை பிருந்தா இசைதுறையை தேர்வு செய்துள்ளார். திரைப்படங்களில் பாடுவதும், படங்களுக்கு டப்பிங் பேசுவதும் என இவர் கலைத்துறையில் வேறு பாதையை தேர்வு செய்துள்ளார்.
அருண் விஜய்- அனிதா விஜயகுமார்: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா விஜயகுமார், துபாயில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அருண் விஜய்யின் அக்காவான அனிதாவிற்கு ஆரம்பத்தில் நிறைய பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால், படிப்பில் கவனம் செலுத்தியதால் அதை நிராகரித்ததாகவும் செய்திகள் உண்டு.
சிபி சத்யராஜ்- திவ்யா சத்யராஜ்: சத்யராஜின் மகளும், சிபியின் அக்காவுமான திவ்யா, சென்னையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணராவார்.
சினேகா-கீதா: சினேகாவின் அக்கா கீதா, பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.