Page Loader
ரஜினியின் கூலியில் ஸ்ருதி ஹாசன்: கேரக்டர் போஸ்டர் வெளியீடு
ரஜினியின் கூலியில் ஸ்ருதி ஹாசன்

ரஜினியின் கூலியில் ஸ்ருதி ஹாசன்: கேரக்டர் போஸ்டர் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 30, 2024
05:43 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கேரக்டர் ரிவீல் போஸ்டர்கள் கடந்த இரு தினங்களாக வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இது வரை மலையாள திரையுலகின் பிரபல நடிகர் சௌபின் ஷாஹிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோரின் கதாபாத்திரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று நடிகை ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளனர். அதன்படி 'ப்ரீத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஸ்ருதி. இவர்களைத்தவிர, சத்யராஜ், உபேந்திரா மற்றும் மஹேந்திரன் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத். இது ரஜினியின் 171 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post