Page Loader
கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம் 
SK 21 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது

கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம் 

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2023
12:19 pm

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. SK21 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்ட அந்த படத்தை இயக்கவிருப்பது ராஜ்குமார் பெரியசாமி. இவர் ஏற்கனவே கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து, 'ரங்கூன்' என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். SK 21 படத்தில் , சேரவிருப்பது சாய் பல்லவி. சிவகார்த்திகேயன் 'மாவீரன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாலும், கமல், 'இந்தியன் 2' படத்தில் பிஸியாக இருந்ததாலும், படத்தின் பூஜை குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியதாக, படத்தின் தயாரிப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

SK 21 படப்பிடிப்பு ஆரம்பம்