
ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் 'ஜவான்'.
இதில் விஜய்சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா, சஞ்சய் தத், பிரியாமணி, யோகிபாபு, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார், ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஷாருக்கான் நடித்து முன்னதாக வெளியான 'பதான்' திரைப்படம் மிக பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது இப்படம் அதன் வெற்றியின் உச்சத்தை முறியடிக்குமா?என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இப்படத்தின் போஸ்டர் ஒன்றினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
புது போஸ்டர்
#CinemaUpdate | அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு!#SunNews | #Jawan | @Atlee_dir | @iamsrk pic.twitter.com/UMEnbMRuQf
— Sun News (@sunnewstamil) August 7, 2023