Page Loader
ராம் சரணுடன் நடித்தால் உடனே திருமணம் ஆகும்: இணையத்தை கலக்கும் வைரல் மீம்
ராம் சரண்னுடன் கியாரா அத்வானி நடிக்கும் RC 15

ராம் சரணுடன் நடித்தால் உடனே திருமணம் ஆகும்: இணையத்தை கலக்கும் வைரல் மீம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2023
09:56 am

செய்தி முன்னோட்டம்

RRR பட புகழ் ராம் சரண், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். நடிகர் சிரஞ்சீவியின் மகனான இவர் படங்களில், இவருக்கு ஜோடியாக ஒப்பந்தமான நடிகைகள் அனைவருக்கும் சமீபத்தில் அடுத்தடுத்து திருமணம் ஆனது. இதை தொடர்ந்து, இணையவாசிகள் இந்த வேடிக்கையான மீம்-ஐ வைரல் ஆகி வருகின்றனர். இந்த மீம் படி, அவருடன் நடித்த நட்சத்திரங்களான சமந்தா (ரங்கஸ்தலம் திரைப்படம்), நாகசைதன்யா அக்கினேனியை திருமணம் செய்து கொண்டார் ஆலியா பட் (RRR திரைப்படம்), ரன்பிர் கபூரை திருமணம் செய்து கொண்டார். ஷங்கர் இயக்கத்தில், 'RC15' படத்தில் ராம்சரனுடன் நடிக்கும் கியாராவிற்கு, சென்ற வாரம் திருமணம் முடிந்தது. அவர் படங்களில் நடித்த, அமலா பால், எமி ஜாக்சன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தகுந்தது.

Instagram அஞ்சல்

ராம் சரணின் ஹீரோயின்கள்

கோலிவுட்

தமிழ் திரையுலகிலும் திருமண ராசியுடைய நடிகர்கள்:

தமிழ் திரையுலகிலும் இதே போல ஒரு மீம் வைரலானது. நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்ட நடிகைகளும் (நயன்தாராவும், ஹன்சிகா மோத்வானியும்), நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த நடிகைகளுக்கும், உடனே திருமணம் நடைபெறுகிறது என்று மீம்கள் பகிரப்பட்டன. அதன்படி, அந்நடிகைகளின் பட்டியல் இதோ: நயன்தாரா (தனி ஒருவன்) ஹன்சிகா (ரோமியோ ஜூலியட்), (எங்கேயும் காதல்) பாவனா (தீபாவளி) ஜெனிலியா (சந்தோஷ் சுப்ரமணியம்) ஸ்ரேயா (மழை) M .குமரன் S/o மஹாலக்ஷ்மி (அசின்) வனமகன் (சயீஷா) ஆகியோர்.