Page Loader
சாந்தனுவின் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் ஆந்தம் வெளியீடு 
சாந்தனுவின் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் ஆந்தம் வெளியீடு

சாந்தனுவின் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் ஆந்தம் வெளியீடு 

எழுதியவர் Nivetha P
May 20, 2023
07:42 pm

செய்தி முன்னோட்டம்

கிரிக்கெட்டினை மையமாக கொண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியினை பெற்றுள்ளது. அந்தவகையில் தற்போது சாந்தனு மற்றும் அசோக் செல்வன் நடித்து வரும் படமும் கிரிக்கெட் களத்தினை கொண்டு எடுக்கப்படும் படம் என்று கூறப்படுகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்திற்கு 'ப்ளூ ஸ்டார்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜெயக்குமார் இப்படத்தினை இயக்குகிறார், கோவிந்த் வசந்த் இசையில் இப்படம் உருவாகிறது. இப்படத்தில் அமைந்துள்ள'ஹே பேக் ஆன் தி ஸ்ட்ரீட்ஸ்'என்னும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆந்தம் ஒன்றினை படக்குழு அண்மையில் இணையத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஜீவா, சென்னை-28, கனா, போன்ற கிரிக்கெட் கதை களத்தினை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வரிசையில் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படமும் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post