பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில், மகளிர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த பேட்டியில், 7 முறை கருக்கலைப்பு செய்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவல்துறை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டது. இதன் அறிக்கைகள் வெளியான பின்னரே இதன் அடுக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
சீமான் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராவாரா?
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று(செப்.,9) காலை 10.30 மணியளவில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை வாங்க மறுத்த சீமான், இன்று தான் வெளியூர் செல்ல இருப்பதால் வரும் செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராவதாக கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு சென்னை காவல்துறை, நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி காவல்துறை அழைப்பாணை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே அவர் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.