Page Loader
சின்னத்திரை நடிகை சித்ரா தந்தையும் தற்கொலை
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

சின்னத்திரை நடிகை சித்ரா தந்தையும் தற்கொலை

எழுதியவர் Venkatalakshmi V
Dec 31, 2024
10:58 am

செய்தி முன்னோட்டம்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் இன்று சென்னையின் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் வருங்கால கணவர் ஹேம்நாத் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. ஆனால் விசாரணையில் இறுதியில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுவித்தது நீதிமன்றம். இந்நிலையில், இன்று சித்ராவின் தந்தை காமராஜ், சென்னையில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post