Page Loader
படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்?
ராமதாஸ் வாழ்க்கையை படமாகவிருப்பது குறித்து பாமக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 25, 2024
08:30 am

செய்தி முன்னோட்டம்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்கை வரலாறு திரைப்படமாகவிருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில், நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ராமதாஸின் பெயர் தவிர்க்க முடியாதது. ஆரம்பகாலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து, மருத்துவ கல்வியை திறம்பட முடித்து, கண் மருத்துவராக பணியாற்றிய ராமதாஸ், பிற்காலத்தில் வன்னியர் சமூகத்திற்காக அரசியலில் குதித்தார். தற்போது திமுக, அதிமுகவை தாண்டி மற்றுமொரு பெரிய கட்சியாக தமிழகத்தில் உருவாகியுள்ளது இவரின் பாமக. இப்படி பல திருப்பங்கள் நிறைந்த இவரது வாழ்க்கையை படமாக்கவுள்ளது இயக்குனர் சேரன் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பிரதமர் மோடி, ஜெயலலிதா, என்.டி.ஆர், உள்ளிட்ட தலைவர்களின் வாழ்கை திரைப்படமாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை