ஜாம்பியுடன் மல்யுத்தம் செய்யும் சந்தானம்: புதிய போஸ்டருடன் 'லவ் பைட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) தயாரிப்பில், செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கியுள்ள லவ் பைட் திரைப்படம் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், சந்தானம் ஒரு ஜாம்பியுடன் (Zombie) பஞ்சா மல்யுத்தம் செய்வது போன்ற சுவாரசியமான காட்சி இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக 2023-ஆம் ஆண்டு கான்ஜூரிங் கண்ணப்பன் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியரும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
ஓடிடி உரிமை
நட்சத்திரப் பட்டாளமும் தொழில்நுட்பக் கலைஞர்களும்
முழு நீள ஜாம்பி-காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள 'லவ் பைட்' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.
மேலும் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, தாய் கிழவி புகழ் முத்துக்குமார், ஆதித்யா கதிர் மற்றும் நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு எஸ். யுவா ஒளிப்பதிவும், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பும், ஃபாக்ஸ்ன் இசையமைப்பும் செய்துள்ள நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Zombie paraaak!!! #LoveBite is all set to bite worldwide on December 18 🧟#LoveBiteFromDec18#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @Ags_production@iamsanthanam @selvinrajxavier @aparnaDasss #Anandraj #VTVGanesh… pic.twitter.com/vLmordmeFd
— AGS Entertainment (@Ags_production) November 28, 2026