
'விமானம்' திரைப்படத்தில் உடல் ஊனமுற்றவராக நடிக்கும் சமுத்திரக்கனி
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகர் சமுத்திரக்கனி, தெலுங்கு பட இயக்குனர் சிவா பிரசாத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'விமானம்'.
இந்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு சென்ற வாரம் வெளியான நிலையில், இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனியை, தேர்வு செய்தது எதற்காக என இயக்குனர் கூறிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
"இந்த கதைக்கு, மாநிறமான ஹீரோ தேவைப்பட்டது. சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியான VIP மற்றும் வடசென்னை படம் என்னை மிகவும் கவர்ந்தது. அதனால், அவரை தேர்வு செய்தேன்" என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில், சமுத்திரக்கனி, உடல் ஊனமுற்ற நபராக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இது இயக்குனரின் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என அவர் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'விமானம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி
#Samuthirakani's #VIMANAM take off promo ✈️✨
— VCD (@VCDtweets) April 17, 2023
📎 https://t.co/dozflkkjIT
June 9th landing!pic.twitter.com/06tHkaA19X