சிட்டாடல் படப்பிடிப்பில் காயமுற்ற நடிகை சமந்தா; இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிரைம் வீடியோவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும், 'சிட்டாடல்'-இன் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்க போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த படப்பிடிப்பில் தற்போது முழுமையாக ஈடுபட்டிருக்கும் சமந்தா, படப்பிடிப்பின் போது கைகளில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது என இன்ஸ்டாவில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதை கண்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமந்தா ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தன்னை எதற்காக இவ்வாறு வருத்திக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வெப் தொடருக்காக, ஏற்கனவே பாக்ஸிங், குதிரையேற்றம், தீவிர உடற்பயிற்சி என பலவற்றிற்கு தன்னை தயார்படுத்தி கொண்டுவருகிறார் சமந்தா. இந்த தொடரை, இரட்டை இயக்குனர்களான ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே. இயக்கவிருக்கிறார்கள்.