சிட்டாடலின் இந்திய பதிப்பில் நடிக்கும் சமந்தா; வெளியான பர்ஸ்ட் லுக்
பிரைம் வீடியோவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும்,'சிட்டாடல்'-இன் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்க போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், சமந்தாவின் பார்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். ஆங்கிலத்தில், ருஸ்ஸோ பிரதர்ஸ் உருவாக்கிய இந்த ஸ்பை யூனிவெர்ஸ், ஒரு வெற்றிகரமான அமெரிக்கா தொடராகும். அதன் இந்திய பதிப்பை, இரட்டை இயக்குனர்களான ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே. இயக்கவிருக்கிறார்கள். இந்த வெப் சீரீஸ்சின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த இயக்குனர் இணையுடன், சமந்தா ஏற்கனவே 'தி பேமிலி மேன் 2' இல் நடித்துள்ளார். பல வெற்றி படங்களை தந்த, ருஸ்ஸோ பிரதர்ஸ் இணை, சமீபத்தில் தனுஷ் நடித்த 'தி கிரே மேன்' படத்தை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.