Page Loader
சிட்டாடல் வெப் சீரிஸிலிருந்து விலகுகிறாரா சமந்தா?
சமந்தாவின் சமீபத்திய புகைப்படம்

சிட்டாடல் வெப் சீரிஸிலிருந்து விலகுகிறாரா சமந்தா?

எழுதியவர் Saranya Shankar
Jan 05, 2023
10:34 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நடித்த யசோதா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம் படம் திரை வெளியீடுக்கு தயாராகியுள்ளது. 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. மகாகவி காளிதாசர் எழுதிய அபிஞான சாகுந்தலம் என்கிற சம்ஸ்கிருத நாடகத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

வதந்திகள்

சமந்தாவை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள்

சமந்தாவின் உடல்நலக்குறைவு காரணமாக இவரின் படங்கள் தாமதமாகி வருகின்றன. இதனால் பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டில் நடித்து வரும் சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் இருந்து இவர் விலகியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு சமந்தா தரப்பில் "சமந்தா சிட்டாடல் சீரிஸில் இருந்து விலகியதாக வெளிவந்த செய்தி உண்மை இல்லை. இவை யூகங்கள் மற்றும் வதந்திகள் தான். விரைவில் சிட்டாடல் படப்பிடிப்பில் சமந்தா பங்கேற்பார் என்றும், ஜனவரி இரண்டாம் பாதியிலிருந்து அவர் பங்கேற்கலாம்" என கூறியுள்ளனர். சிட்டாடல் என்பது ஒரு பாலிவுட் வெப் சீரிஸ். இதில் சமந்தாவிற்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார்.