LOADING...
யே மாயா சேசாவே (YMC) டாட்டூவை நீக்கிய நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படம்
யே மாயா சேசாவே டாட்டூவை நீக்கிய நடிகை சமந்தா

யே மாயா சேசாவே (YMC) டாட்டூவை நீக்கிய நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 07, 2025
05:00 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல தென்னிந்திய சினிமா நடிகை சமந்தா ரூத் பிரபு, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஊகங்களைத் தூண்டியுள்ளார். அதாவது, அதில் அவர் நீண்ட காலமாக கொண்டிருந்த 'யே மாயா சேசாவே' (YMC) டாட்டூ இல்லை. ஒரு காலத்தில் அவரது மேல் முதுகில் பொறிக்கப்பட்டிருந்த இந்த டாட்டூ, அவரது முதல் படத்திற்கான அஞ்சலி மற்றும் அவரது முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவுடன் அடையாளமாக அது இருந்தது. இந்நிலையில், விவாகரத்துக்குப் பிறகு சமந்தா ஒரு புதிய அத்தியாயத்தைத் தழுவியதற்கான அறிகுறியாக அதை நீக்கி இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பின்னணி 

டாட்டூவின் பின்னணி

முன்னதாக, 2010 ஆம் ஆண்டு வெளியான யே மாயா சேசாவே திரைப்படத்தில் ஒன்றாக நடித்த சமந்தாவும் நாக சைதன்யாவும் 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2021 இல் பிரிவை அறிவித்தனர். டாட்டூ இல்லாத புகைப்படம் சமந்தாவின் நத்திங் டு ஹைட் என்ற புதிய திரைப்படத்திற்கான டீஸருடன் இணைந்து வந்துள்ளது. வீடியோவில், அவர் ஒரு கேமரா லென்ஸில் நம்பிக்கையுடன் தலைப்பை எழுதுவதைக் காணலாம், இது வெளிப்படைத்தன்மை மற்றும் மாற்றத்தைக் குறிக்கிறது. "இது நோக்கத்துடன் தொடங்குகிறது" என்று அவர் அதற்கு தலைப்பிட்டார். சமந்தா சமீபத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் ஒரு படத்தைப் பகிர்ந்ததை அடுத்து, இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.