ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்; சீறி எழுந்த சமந்தா
நடிகை சமந்தா, வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த பதிவை வன்மையாக கண்டித்த ஒரு மருத்துவர், ஹெபடாலஜிஸ்ட் இந்த நெபுலைசேஷன் முறை, ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியது மட்டுமல்லாமல், சமந்தாவை "உடல்நலம் மற்றும் அறிவியல் படிப்பறிவற்றவர்" என்று அழைத்தார். அதோடு, இது போல பொது சுகாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக நடிகருக்கு "அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது ஜெயிலில் தள்ளப்பட வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு தற்போது சமந்தா பதிலளித்துள்ளார்.
சமந்தாவின் பதிவு
"நான் செய்து பார்த்தைதையே மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறேன், விளம்பர தூதர் அல்ல" என சமந்தா காட்டம்
'தி லிவர் டாக்' பக்கத்தின் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸின் கருத்துகளுக்கு, சமந்தா இன்று காலை தனது சமூக வலைத்தளம் மூலமாக பதிலளித்துள்ளார். அவருடைய பதிவின் படி, "தற்போது இருக்கும் மருத்துவ முறைகள் மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது. அனைவராலும் இவ்வளவு செலவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே! நான் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை பேரில் முயற்சி செய்து, பலன் தந்தவையை மட்டுமே எனது சமூக வலைத்தளத்தில் பகிர்கிறேன்" "என்னை போல இந்த நோயின் தாக்கத்தினால் அவதிப்படுபவர்களுக்கு உதவவே இந்த பதிவுகளை வெளியிடுகிறேன்." "இது பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுவது அல்ல" என காட்டமாக பதிவிட்டுள்ளார். எனினும் எதிர்காலத்தில் கவனத்துடன் பதிவுகளை வெளியிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.