தன்னை பற்றி விமர்சித்த தயாரிப்பாளரை மறைமுகமாக சாடிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றி சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தயாரிப்பாளர் விமர்சித்து பேசி இருந்தார். "சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. 'நட்சத்திர நாயகி' என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். குறிப்பாக விவாகரத்திற்கு பின்னர்" என்றும், "யசோதா படத்தின் ப்ரோமோஷன்களில், கண்ணீர் சிந்தி, படத்தை ஓட வைக்க முயன்றார். தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனுக்கும் கிட்டத்தட்ட அதையே ஆயுதமாக பயன்படுத்தினார்" என பகீர் குற்றசாட்டை வைத்தார் சிட்டிபாபு. "ஒவ்வொரு முறையும் செண்டிமெண்ட் வேலை செய்யாது. இவை அனைத்தும் சீப்பான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள்," என்று அவர் சமந்தா பற்றி அவதூறாக பேசினார்.
சமந்தாவின் நக்கல் பதில்
தயாரிப்பாளர் இந்த பேட்டி அளித்தபோது, சமந்தா 'சிட்டாடெல்' என்ற வெப்சீரிஸ் விழாவில் பிஸியாக இருந்தார். அதனால், பெரிதாக எந்த ரியாக்ஷனும் சமந்தா தரவில்லை. விழா முடிவடைந்ததும், தனது இன்ஸ்டாகிராமில், ஒரு பதிவை இட்டார். அதில், காதுகளில் முடி வளர்வது ஏன் என தெரியுமா? என்பது போன்ற ஒரு பதிவை இட்டார். இதை பார்த்த அவரின் ரசிகர்களும், ஊடகத்துறையினரும், அவர் தயாரிப்பாளர் சிட்டி பாபுவை தான் குறிவைத்து சூசகமாக குறிப்பிட்டுள்ளார் என கூறியது. அதற்கு காரணம், சிட்டி பாபுவிற்கும், செவி மடலில் அதிகமான முடி வளர்ச்சி உண்டு. அதோடு, அந்த இன்ஸ்டா பதிவிற்கு #IYKYK எனவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் விரிவாக்கம், "If You Know, You Know".