
தனது படப்பிடிப்பு தளங்களில், பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிய அனுமதிக்காத சல்மான் கான்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் பல ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் சல்மான்கான். இவறது, 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், படத்தில் நடித்த பாலக் திவாரி என்ற நடிகை, "சல்மான் செட்டில் இருக்கும்போது, அனைத்து நடிகைகளும் 'நல்ல பெண்களை' போல, உடலின் பாகங்களை வெளிக்காட்டா வண்ணம் உடை அணிய வேண்டும் என ஒரு அறிவிக்கப்படாத விதி இருக்கும்" என கூறி இருந்தார்.
இதை குறித்து சல்மான் கானிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அவர், "பெண்களின் உடல், விலைமதிப்பற்றது. அதை எவ்வளவு மறைகிறார்களோ, அவ்வளவு நல்லது. அவர்களை குறை கூறவில்லை. ஆனால், பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வை சரியில்லை, அது எனக்கு பிடிக்கவில்லை" எனக்கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | “பெண்களின் உடல் விலை மதிப்பற்றது; அதனை எவ்வளவு மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது” - நடிகர் சல்மான் கான்#SunNews | #SalmanKhan | @BeingSalmanKhan pic.twitter.com/TL2KUc66GH
— Sun News (@sunnewstamil) April 30, 2023