Loading...
பட்டினி கிடந்தாலும் அசைவம் தொட மாட்டேன்: ஜப்பான் அனுபவம் பகிர்ந்த சாய் பல்லவி
பட்டினி கிடந்தாலும் அசைவம் தொட மாட்டேன்: ஜப்பான் அனுபவம் பகிர்ந்த சாய் பல்லவி

பட்டினி கிடந்தாலும் அசைவம் தொட மாட்டேன்: ஜப்பான் அனுபவம் பகிர்ந்த சாய் பல்லவி

எழுதியவர் Vasuki
Oct 17, 2026
06:51 pm

செய்தி முன்னோட்டம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, அப்படத்திற்காகவே தான் சைவ உணவுக்கு மாறியதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தனது உறுதியான உணவுப் பழக்கவழக்கம் குறித்த பழைய தகவல்கள் இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. எதற்காகவும் பிற உயிர்களைத் துன்புறுத்தி அசைவம் உண்ண மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கும் அவர், ஜப்பானில் படப்பிடிப்பின் போது சைவ உணவு கிடைக்காமல் ஒரு மாத காலம் முழுமையான உணவின்றித் தவித்த அனுபவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பட்டினி

ஜப்பானில் ஒரு மாதம் பட்டினி அனுபவம்

முன்னதாக அமரன் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்த சாய் பல்லவி, தான் எப்போதும் தீவிர சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பவர் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

"நான் ஒரு மாதம் ஜப்பானில் படப்பிடிப்பிற்காகச் சென்றிருந்தபோது, அங்கு சுத்த சைவ உணவு கிடைக்கவே இல்லை. சைவ உணவுகள் என்று கூறப்பட்டவற்றில் கூட கோழி இறைச்சியின் சூப் கலந்திருந்தது.

என் உடல் ஆரோக்கியத்திற்காக மற்றொரு விலங்கையோ அல்லது உயிரையோ கொல்ல விரும்பவில்லை என்பதால், உணவு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று சாப்பிடாமல் பட்டினியாகவே இருந்துவிட்டேன்.

நான் எங்கு சென்றாலும் நிரந்தரமாகச் சைவ உணவை மட்டுமே உண்பவள்" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

எச்சரிக்கை

'ராமாயணா' வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை

'ராமாயணா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் தான் சாய் பல்லவி அசைவத்தைக் கைவிட்டு முழு சைவமாக மாறினார் என்றும், வெளிநாட்டுப் படப்பிடிப்புகளுக்குத் தனியாகத் தனது சமையல்காரரை அழைத்துச் சென்றார் என்றும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தத் தகவல்களைத் தொடக்கத்திலேயே திட்டவட்டமாக மறுத்த சாய் பல்லவி, "எனது பட வெளியீடுகள் மற்றும் முக்கியமான தருணங்களில் உண்மைக்கு மாறாகப் பரப்பப்படும் இத்தகைய பொய்ச் செய்திகளை இனியும் சும்மா விடமாட்டேன்.

வதந்தி பரப்பும் நபர்கள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கடுமையாக எச்சரித்திருந்தார்.

ராமாயணா படத்திற்கு முன்பிருந்தே தான் தீவிர சைவப் பிரியர் என்பதை நடிகை சாய் பல்லவி இதன் மூலம் ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT