Page Loader
பிக் பாஸ் தமிழ் 8: முதல் ஆளாக வெளியேறிய சச்சனா; அடுத்து வெளியேறப் போகும் போட்டியாளர் இவர் தான்
பிக் பாஸ் தமிழ் 8: முதல் ஆளாக வெளியேறிய சச்சனா

பிக் பாஸ் தமிழ் 8: முதல் ஆளாக வெளியேறிய சச்சனா; அடுத்து வெளியேறப் போகும் போட்டியாளர் இவர் தான்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 08, 2024
09:14 am

செய்தி முன்னோட்டம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) தொடங்கிய நிலையில், வியக்கத்தக்க வகையில் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணிநேரத்தில் அதன் முதல் வெளியேற்றத்தைக் கண்டது. நடிகை சஞ்சனா நிமிதாஸ் 24 மணி நேரத்தில் முதல் ஆளாக வெளியேறினார். இதனால் போட்டியாளர்களிடையே முதல் நாள் முதலே பதற்றம் தொத்திக் கொண்டுள்ளது. முன்னதாக, முதல் நாளிலேயே நடைபெற்ற நாமினேஷனில் சச்சனா தனது சக ஹவுஸ்மேட்களிடமிருந்து வெளியேற்றப்படுவதற்கான அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றார். பிக் பாஸ் சச்சனாவிடம், அவர் கல் கோப்பையை உடைத்து பிரதான கதவு வழியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார். சச்சனா உணர்ச்சி வசப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

உடைந்து அழுதார் சச்சனா

முதல் வார கேப்டன்

முதல் வார கேப்டனாக தர்ஷிகா தேர்வு

சச்சனா வெளியேற்றத்திற்கு பிறகு முதல் வார கேப்டனை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட மியூசிக்கல் சேர் போட்டியில், இறுதியில் தர்ஷிகா வெற்றி பெற்றார். இதன் மூலம், அவர் முதல் வாரத்தின் கேப்டனாக ஆனதோடு, முதல் ஆற எவிக்சனில் இருந்தும் தப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து முதல் வார எவிக்சனுக்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. அதன்படி அதிக ஓட்டு வாங்கிய முதல் ஆறு பேரான ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், செளந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ரஞ்சித் எவிக்சனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.