Page Loader
சர்வேதேச அரங்கில் விருதுகளை குவிக்கும் RRR: HCA விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படமாக தேர்வு
HCA விருதுகளுடன் RRR படக்குழு

சர்வேதேச அரங்கில் விருதுகளை குவிக்கும் RRR: HCA விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படமாக தேர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

HCA என்று அழைக்கப்படும் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன், ஆண்டு தோறும் சிறந்த திரைப்பட படைப்புகளுக்கான விருதை வழங்குகிறது.அந்த விருது பட்டியலில், பல பிரிவுகளில் விருதை தட்டி சென்றுள்ளது RRR திரைப்படம். குறிப்பாக, 'சிறந்த சர்வதேச திரைப்படம்' என்ற பிரிவில் வென்றுள்ளது ராஜமௌலியின் RRR. அதுமட்டுமின்றி, சிறந்த ஆக்ஷன் படத்திற்கும், சிறந்த பாடலுக்கும் (நாட்டு நாட்டு) பாடலுக்கும், RRR திரைப்படம் விருதை வென்றுள்ளது. இந்த விருதை, படத்தின் இயக்குனர் ராஜமௌலியும், அவருடன் இணைந்து படத்தின் நாயகன் ராம்சரணும் பெற்றுக்கொண்டனர். சென்ற மாதம், சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த RRR திரைப்படம், ஆஸ்கர் பரிந்துரைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

HCA விருதை வென்ற RRR