Page Loader
ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள "நாட்டு கூத்து" பாடல்: ஒரு குட்டி பிளாஷ்பேக்
விருதை வெல்லுமா 'நாட்டு கூத்து' பாடல்?

ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள "நாட்டு கூத்து" பாடல்: ஒரு குட்டி பிளாஷ்பேக்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2023
04:50 am

செய்தி முன்னோட்டம்

ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தில் வரும் நாட்டு கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகி வெளிவந்த படம் RRR படமாகும். 2022-ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இப்படத்தில் N. T. ராமாராவ் ஜூனியர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஷ்ரியா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை செய்தது. இதனிடையே இந்தியாவிலிருந்து RRR படத்தினை ஆஸ்கார் விருத்திற்காக பரிந்துரைச் செய்யப்பட்டு இருந்தது.

RRR

ஆஸ்கார் விருது போட்டிக்கு முன்னேறிய 'நாட்டு குத்து' பாடல்

95வது ஆஸ்கார் விருது விழா, வருகிற மார்ச் மாதம் 12-ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற உள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழி படங்களும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும். அப்படி பரிந்துரைக்கப்பட்ட படங்கள், ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு வெளியிடப்படும். அந்த லிஸ்டில் தான், ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில், RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த ஆஸ்கார் போட்டியில், மேலும் இரு இந்திய படங்களும் போட்டியிடுகின்றன. 'ஆல் தட் பரீத்ஸ்' என்கிற குஜராத்தி மொழித்திரைப்படம், சிறந்த ஆவண படம் பிரிவில் போட்டியிடுகிறது. 'தி எலிபாண்ட் விஸ்பரெர்ஸ்' என்கிற திரைப்படமும், சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் போட்டியிடுகிறது.