அடுத்த செய்திக் கட்டுரை

இன்ஸ்டாகிராம் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் நடிகை சமந்தா?
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 03, 2023
02:47 pm
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
அவரின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாக்ராமை பலரும் பின்தொடர்ந்து வருகின்றனர். அவருக்கு கிட்டத்தட்ட 24.8 மில்லியன் followers இருக்கின்றனர்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பதிவுகள் மட்டுமின்றி, அவ்வப்போது தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்களை செய்து வருபவர் சமந்தா.
இதுபோக மிந்த்ரா, மாமார்த் போன்ற பல உயர்தர பிராண்டுகளின் பிராண்ட் அம்பாசிடராக அவற்றின் தயாரிப்புகளுக்கு அடிக்கடி விளம்பரப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு விளம்பரத்திற்கு, 20 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாகவும், அதாவது கிட்டத்தட்ட ரூ. 3 கோடி வரை சம்பாதிப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பளத்தை அவர் 'புஷ்பா', 'பேமிலி மேன்' வெற்றிக்கு பிறகுதான் வாங்குகிறார் எனவும் தெரிவிக்கின்றன.