Page Loader
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு 
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு 

எழுதியவர் Nivetha P
Sep 03, 2023
02:48 pm

செய்தி முன்னோட்டம்

'தமிழ்படம்' திரைப்படத்தின் இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் அண்டனி தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் 'ரத்தம்'. இப்படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா தாஸ், நிழல்கள் ரவி, கலை ராணி, மகேஷ், ஜான் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கண்ணன் இசையமைப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் டீஸர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் வெங்கட் பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பர். இது மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் இப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்னும் அறிவிப்பினை ஓர் வீடியோ பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

திரைப்படம் வெளியீடு