LOADING...
'ராவண கோட்டம்' திரைப்பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தரப்பு 
'ராவண கோட்டம்' திரைப்படம், எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, சம்பவத்தையோ அடிப்படையாக கொண்டது அல்ல என தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது

'ராவண கோட்டம்' திரைப்பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தரப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
May 11, 2023
08:00 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் வெற்றி சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு நடித்த 'ராவண கோட்டம்' என்ற திரைப்படம், நாளை (மே 12.,) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்திற்கு தடைகோரி, நாடார் சமூகத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். அதோடு, படம் வெளியாகும் திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர். நாடார் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதற்கு விளக்கம் அளித்துள்ளனர், படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி குரூப்ஸ். தயாரிப்பாளர் தந்த அறிக்கையில், "மண் சார்ந்த கதையை, மனிதத்தை அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் இராவண கோட்டம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்...எந்த வகையிலும், இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை"என குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சாந்தனுவின் ட்வீட்