'5 ஆடம்பர வீட்டிற்கு சொந்தக்காரியா?'; இணையத்தில் பரவிய செய்திக்கு பதில் சொன்ன ரஷ்மிகா
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் 'நேஷனல் க்ரஷ்' என்று கொண்டாடப்பட்ட நடிகை, ரஷ்மிகா மந்தனா. அவர் மீது அவ்வப்போது பல ட்ரோல்கள் வந்தன. அவற்றை மிகவும் ஸ்போர்ட்டிவாக கையாண்ட ரஷ்மிகா, தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் அவர் வெறும் பாடலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டார் என்று விமர்சனங்கள் எழுந்த போது,' தெரிந்து தான் 'வாரிசு' படத்தில் நடித்தேன்' என்று கூறியிருந்தார். தற்போது அவரை பற்றி மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 5 ஆண்டு திரையுலக வாழ்க்கையில், 5 மாநிலங்களில், 5 ஆடம்பர அபார்ட்மெண்டை சொந்தமாக்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ரஷ்மிகா கூறியுள்ள பதில், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.