இணையத்தளவாசிகளின் கடும் விமர்சனங்களால் மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா
தென்னிந்தியா சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர்களுள் ஒருவர் நடிகை ராஷ்மிகா. இந்தி படங்களிலும் தற்போது அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் 'வாரிசு'. இதில் ராஷ்மிகாவிற்கு அதிக நடிப்பு இல்லையென்றாலும், விஜயுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டு தான் இப்படத்திற்கு ஒப்புக்கொண்டதாக ராஷ்மிகாவே முன்னதாக கூறியிருந்தார். இருந்தாலும் அவருக்கு எதிரான விமர்சனங்களும், ட்ரோல்களும் வந்த வண்ணம் இருந்துள்ளது. மேலும் 'காந்தாரா' படத்தை அவர் பார்க்கவில்லை என்று கூறியது கன்னட சினிமாவை அவர் புறக்கணித்தது போல் அவர் நடந்து கொள்கிறார் என்று சில மாதங்களாகவே பல விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களில் சிக்கி வருகிறார்.
மோசமான விமர்சனங்களால் மனமுடைந்து பேசிய ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த ஓர் பேட்டியில் இது குறித்து மிகவேதனையோடு பேசியுள்ளார். அவர் கூறுகையில், மக்கள் தன் உடலில் பிரச்சனை உள்ளது என்று நினைக்கிறார்கள் என்றும், ஓராண்டாகவே தன்னை ஏராளமானோர் ட்ரோல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நான் ஒர்க்-அவுட் செய்தால் ஆண் போல் உள்ளதாக கூறுகிறார்கள், ஒர்க்-அவுட் செய்யாவிட்டால் பருமனாக இருப்பதாக கூறுகிறார்கள். நான் பேசினால் கிரிஞ்ச் என்கிறார்கள், பேசவில்லை என்றால் திமிரு என்கிறார்கள். நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு விலகவேண்டும் என்று நினைக்கிறார்களா? என்று மிக வேதனையாக பேசியுள்ளார். மேலும், 'உங்கள் வார்த்தைகள் என்னை காயப்படுத்துகிறது' என்று கூறிய அவர், என் மீது ஏன் இவ்வளவு வெறுப்புணர்வு என்று புரியவில்லை என்றும் கூறினார்.