ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த நடிகை ரஷ்மிகா மந்தனா
ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட டாப்-30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் இடம்பிடித்துள்ளார். ஆண்டுதோறும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் தற்போது 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய திரையுலகை சேர்ந்த மூன்று இளம் நடிகைகள் இடம்பெற்று உள்ளனர். அதன்படி பொழுதுபோக்கு பிரிவில், 27 வயதாகும் நடிகை ரஷ்மிகா மந்தனா, 28 வயதாகும் நடிகை ராதிகா மதன், 25 வயதாகும் அதிதி சைகல் என்கிற பாடகி ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 'நேஷனல் க்ரஷ்' என்றழைக்கப்படும் ரஷ்மிகா சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் அதிரடியான வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.