ராமாயணம் முன்பதிவு சாதனை: முதல் 24 மணி நேரத்திலேயே இந்தியாவில் ₹5.44 கோடி வசூல்
செய்தி முன்னோட்டம்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம் தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நாடு முழுவதும் ரூ.5.44 கோடி வசூலை வாரிக்குவித்து படைத்துள்ளது. ரன்பீர் கபூர் ஸ்ரீராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், 'கே.ஜி.எஃப்' புகழ் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ள இத்திரைப்படத்தின் மீது இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இதுவரை சுமார் 92,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
வசூல்
பிரீமியம் டிக்கெட் விலை
திரைப்பட வர்த்தகக் கண்காணிப்பு தளமான Sacnilk தகவலின்படி, 104 நகரங்களில் தொடங்கிய முன்பதிவில் டெல்லி-என்சிஆர் பகுதி ரூ.1.52 கோடி வசூலித்து முதலிடத்திலும், மும்பை ரூ.1.10 கோடி ஈட்டி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
புனே, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் ரசிகர்கள் போட்டிபோட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
மொழிவாரியாகப் பார்க்கும்போது, ஹிந்தி பதிப்பில் இருந்து மட்டுமே ரூ.5.15 கோடி வசூலாகியுள்ளது.
கன்னடப் பதிப்பு ரூ.27.95 லட்சமும், தெலுங்கு பதிப்பு ரூ.48,700-ம் வசூலித்துள்ளன.
குறிப்பாக மும்பை லோயர் பரேலில் உள்ள பிவிஆர் ஐகான் திரையரங்கில் ஐமேக்ஸ் 3டி சிறப்பு இருக்கைகளுக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக ரூ.2,770 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அவை மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன.
நவம்பர் 5 ரிலீஸ்
நட்சத்திரப் பட்டாளம்
விநியோகஸ்தர்களுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் முன்பதிவு முழுவீச்சில் திறந்துவிடப்பட்டுள்ளது.
சன்னி தியோல் (ஹனுமான்), ரவி துபே (லக்ஷ்மணன்), அருண் கோவில், லாரா தத்தா, அனுபவ் கெர், ரகுல் பிரீத் சிங் எனப் பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நவம்பர் 5-ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகளவில் வெளியாகவுள்ளது.
சோனி பிக்சர்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் வெளியிடும் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்குத் திட்டமிடப்பட்டுள்ள சூழலில், அதன் படப்பிடிப்புப் பணிகள் ஏற்கனவே 50 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.