மெகா குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி: ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு பிறந்த இரட்டைக்குழந்தைகள்
செய்தி முன்னோட்டம்
உலகப் புகழ்பெற்ற 'RRR' திரைப்படத்தின் நாயகன் ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா தம்பதிக்கு, ஜனவரி 31, 2026 அன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். தாத்தாவான மகிழ்ச்சியில் இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது எக்ஸ் (X) தளத்தில் இப்பதிவை பகிர்ந்துள்ளார்: "மிக்க மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம். ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர். தாத்தா - பாட்டியாக இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளை எங்கள் குடும்பத்திற்குள் வரவேற்பது எங்களுக்குக் கிடைத்த பெரும் ஆசீர்வாதம். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் அன்பிற்கும் நன்றி."
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
With immense joy and a heart full of gratitude, we are happy to share that @AlwaysRamCharan and @upasanakonidela have been blessed with twins - a baby boy and a baby girl.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) January 31, 2026
Both the babies and the mother are healthy and doing well. ✨
Welcoming these little ones into our family…
இரண்டாவது கர்ப்பம்
குடும்ப வாழ்க்கை மற்றும் திருமணம்
இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே கிளின் காரா என்ற மகள் உள்ளார். உபாசனா தனது இரண்டாவது கர்ப்பத்தை கடந்த அக்டோபர் 2025-ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தீபாவளி கொண்டாட்டத்தின் போது அவர் பகிர்ந்த 'வளைகாப்பு' வீடியோவில், "இரட்டிப்பு கொண்டாட்டம், இரட்டிப்பு அன்பு" எனக் குறிப்பிட்டிருந்தது இரட்டை குழந்தைகள் பிறக்கப்போவதைக் கோடிட்டுக் காட்டியிருந்தது. ராம் சரண் மற்றும் உபாசனா 2012-ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு 2023-ல் முதல் குழந்தை பிறந்த நிலையில், தற்போது ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பது குடும்பத்தினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.