Page Loader
"நல்லவர்களை ஆண்டவன் கைவிட மாட்டான்": ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சூப்பர்ஸ்டார்
ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சூப்பர்ஸ்டார்

"நல்லவர்களை ஆண்டவன் கைவிட மாட்டான்": ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சூப்பர்ஸ்டார்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 01, 2025
10:23 am

செய்தி முன்னோட்டம்

ரசிகர்களுக்கு தனது பாணியில், 2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். எக்ஸ் தலத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். " என்று பஞ்ச் டயலாக்குடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதோடு, இன்று காலை அவர் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினி. ரஜினி தற்போது 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அப்படம் 2025 கோடை விடுமுறைக்கு வெளிவரும். அதனைத்தொடர்ந்து அவர் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சிம்பு

நடிகர் சிம்பு வாழ்த்து

நடிகர் சிம்புவும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "நீங்கள் உங்கள் ஆன்மாவிற்குள் பிரபஞ்சத்தை சுமக்கிறீர்கள். பிரகாசிக்கட்டும்." என அவர் எக்ஸ்-இல் பதிவிட்டுள்ளார். நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசனுடன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்து வருகிறார். ஆன்மீக பயணத்திலும் தீவிர ஈடுபாடு காட்டி வரும் சிம்பு, தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. இவர்களை தாண்டி பல நட்சத்திரங்கள் தங்கள் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வரவேற்றுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post