NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'வேட்டையன்': ரன்னிங் டைம், சான்றிதழ் மற்றும் முழு நடிகர்கள் விவரம் இதோ!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'வேட்டையன்': ரன்னிங் டைம், சான்றிதழ் மற்றும் முழு நடிகர்கள் விவரம் இதோ!
    வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது

    'வேட்டையன்': ரன்னிங் டைம், சான்றிதழ் மற்றும் முழு நடிகர்கள் விவரம் இதோ!

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 03, 2024
    08:25 am

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    தயாரிப்பாளர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வேட்டையன் படம் U/A சென்சார் சான்றிதழ் பெற்றதனை அறிவித்தனர்.

    "The hunt is certified! VETTAIYAN gets the U/A stamp! Get ready for an action-packed extravaganza coming your way" என பதிவிட்டிருந்தனர்.

    அதன்படி, வேட்டையன் திரைப்படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் 43 நிமிடங்கள் ஆகும்.

    திரைப்பட விவரங்கள்

    வேட்டையன் கதை மற்றும் ரஜினிகாந்தின் பாத்திரம்

    வேட்டையனில், கிரிமினல் என்கவுன்டர்களை கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கிறார்.

    முன்னதாக 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் தனி கவனத்தை பெற்ற TJ ஞானவேல், இப்படத்தில் கருத்தியல் மோதல்கள் மற்றும் மனித உரிமைகள் சிக்கல்களை பற்றி பேசியுள்ளார்.

    அதோடு, 33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் பெரிய திரையில் மீண்டும் இணைகிறார்கள்!

    மேலும் அமிதாப் பச்சனுக்கு இது முதல் நேரடி தமிழ் திரைப்படமாகும்.

    குழும நடிகர்கள்

    'வேட்டையன்' படத்தில் நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்

    வேட்டையனில் ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், கிஷோர், ரக்ஷன், ஜி.எம்.சுந்தர், அபிராமி, ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மேலும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் 'மனசிலையோ' பாடலில் ரஜினியுடன் நடனமாடியுள்ளார்.

    வேட்டையன் படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

    வேட்டையனுக்குப் பிறகு ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடிக்கிறார். இந்த அதிரடி படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் உபேந்திர ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேட்டையன்
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    ஆன்லைனில் மின்சார கட்டணம் செலுத்துகிறீர்களா? பயனர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல் மின்சார வாரியம்
    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இனி சிக்கல் இல்லை; டிராகன் காப்ஸ்யூல் மிரட்டலை வாபஸ் பெற்றார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டாடா
    பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா கிரிக்கெட்

    வேட்டையன்

    ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்! அமிதாப் பச்சன்
    அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம் ரஜினிகாந்த்
    ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது ரஜினிகாந்த்
    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார் ரிஷப் பண்ட்
    கலைஞர் எனும் தாய் புத்தகம் வெளியீடு; முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார் கலைஞர் கருணாநிதி
    துரைமுருகன் ரொம்ப டேஞ்சர்; ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு துரைமுருகனை கலாய்த்த ரஜினிகாந்த் துரைமுருகன்
    உஷாரா இருப்பேன், கவலை வேண்டாம்; ரஜினிகாந்த் அறிவுரையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025