ஜெயிலர் 2 முதல் நாளிலேயே வசூல் சாதனை: உலகளவில் ரூ.125 கோடி வசூல்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி பல சாதனைகளைப் படைத்துள்ளது. சாக்னில்க் தரவுகளின்படி, 'ஜெயிலர் 2' படத்தின் முதல் நாள் இந்தியா நெட் வசூல் ரூ.59.70 கோடி. வெளிநாட்டு வசூல், சுமார் ரூ.55 கோடி; உலகளாவிய மொத்த வசூல் ரூ.125.25 கோடி நான்கு மொழிகளில் 16,599 காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்ட இப்படம், தமிழகத்தில் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் முதல் நாள் வசூலான ரூ.42.70 கோடியை முறியடித்து, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ் ஓபனிங் சாதனையைப் படைத்துள்ளது.
ஒப்பீடு
ரஜினியின் முந்தைய படங்களோடு ஒப்பீடு
'ஜெயிலர் 2' திரைப்படம் ரஜினிகாந்தின் முந்தைய படமான 'கூலி' படத்தின் முதல் நாள் வசூலான (சுமார் ரூ.151.7 கோடி) சாதனையை எட்டவில்லை என்றாலும், ரஜினியின் சினிமா வரலாற்றில் இது 3-வது மிகப்பெரிய ஓபனிங் வசூலாகும்.
மேலும், 2026-ஆம் ஆண்டின் இந்தியாவின் ஒட்டுமொத்த மிகப்பெரிய ஓபனிங் படங்களில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
வார இறுதி நாள்களுடன் தொடர் விடுமுறை வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.