Loading...
4 நாளில் ரூ.424 கோடி வசூல்: பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் ரஜினியின் ஜெயிலர் 2
4 நாளில் ரூ.424 கோடி வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் ரஜினியின் ஜெயிலர் 2

4 நாளில் ரூ.424 கோடி வசூல்: பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் ரஜினியின் ஜெயிலர் 2

எழுதியவர் Vasuki
Oct 19, 2026
03:43 pm

செய்தி முன்னோட்டம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் படைத்து வருகிறது. கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வெளியான வந்த இப்படம், வெளியான வெறும் நான்கே நாட்களில் உலகளவில் ரூ.424.25 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. நான்காவது நாளான நேற்று மட்டுமே சர்வதேச அளவில் ரூ.40 கோடி வசூலித்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு வசூல் மட்டும் ரூ.190 கோடியைக் கடந்துள்ளதுடன், இந்தியாவிலும் ரூ.200 கோடி கிளப்பில் நுழையத் தயாராகியுள்ளது.

மைல்கல்

இந்தியாவில் 200 கோடி எட்டும் வசூல்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.55.85 கோடியை வாரிக்குவித்த 'ஜெயிலர் 2', ஒட்டுமொத்த உள்நாட்டு வசூலில் ரூ.199.90 கோடியை எட்டி அசத்தியுள்ளது.

இதில் தமிழில் ரூ.39.95 கோடியும், தெலுங்கில் ரூ.9.50 கோடியும், இந்தியில் ரூ.5.75 கோடியும், கன்னடத்தில் ரூ.0.65 கோடியும் வசூலாகப் பதிவாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் ரூ.250 முதல் ரூ.350 கோடி பொருட்செலவில் உருவான இப்படம், முதல் வார இறுதியில் பட்ஜெட்டைக் கடந்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.

ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருடன் ஹிருத்திக் ரோஷன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் சிறப்புத் தோற்றங்களும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

மகிழ்ச்சி

"தியேட்டர்கள் வெறித்தனமாக அதிருது": நெல்சன் உருக்கம்

படத்தின் அதிரடி வெற்றி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குநர் நெல்சன் திலீப்குமார், "தியேட்டர்கள் வெறித்தனமாக அதிர்ந்து கொண்டிருக்கின்றன. தலைவரின் மேஜிக் எப்போதுமே தனித்துவமானது. 'ஜெயிலர் 2' படத்திற்கு மக்கள் கொடுத்து வரும் இந்த அபரிமிதமான அன்பிற்கும் வரவேற்பிற்கும் மனமார்ந்த நன்றிகள். ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடுவதைப் பார்ப்பதை விடப் பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இப்படத்தில் நடித்த வித்யா பாலன், நெல்சனின் இயக்கத்தைப் புகழ்ந்து, "நெல்சனின் படங்கள் பேல் பூரி போன்றது. நகைச்சுவை, ஆக்ஷன், இசை என அனைத்து அம்சங்களும் அதில் மிகச் சரியான அளவில் கலந்திருக்கும்" என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT