Page Loader
ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், 'ரஜினிகாந்த் அன்பு இல்லம்' கட்டித்தரப்பட்டது
ரஜினிகாந்த் ரசிகர் மாற்றம் சார்பில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், 'ரஜினிகாந்த் அன்பு இல்லம்' கட்டித்தரப்பட்டது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2023
05:03 pm

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்தின் திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில், அவரின் ரசிகர் மன்றம் சார்பில், ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பல பிரபலங்களை பத்திரிக்கை வைத்து அழைத்து வந்தனர், ரசிகர் மன்ற நிர்வாகிகள். சென்ற வாரம் நடைபெற இருந்த இந்த விழா, தவிர்க்க முடியாத காரணத்தால் நிறுத்தப்பட்டது என பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று (மார்ச்-26), ஐந்து பேருக்கு,'ரஜினிகாந்த் அன்பு இல்லம்' என வீடுகள் கட்டி தரப்பட்டன. மேலும் சிலருக்கு பண உதவியும், வாகன உதவியும் வழங்கப்பட்டது. 'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற பெயரில் இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டன என மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

நலத்திட்ட உதவிகள்

ட்விட்டர் அஞ்சல்

ரஜினிகாந்த் அன்பு இல்லம்