LOADING...
ரஜினி -கமல் இணையும் மெகா பட்ஜெட் படம் தள்ளிவைப்பா? தேர்தல் தோல்வி எதிரொலியா? தீயாய் பரவும் வதந்தியும் உண்மையும்!
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'KH x RK' திரைப்படம்

ரஜினி -கமல் இணையும் மெகா பட்ஜெட் படம் தள்ளிவைப்பா? தேர்தல் தோல்வி எதிரொலியா? தீயாய் பரவும் வதந்தியும் உண்மையும்!

எழுதியவர் Venkatalakshmi V
May 06, 2026
12:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் திரையுலகமே வியந்து எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'KH x RK' திரைப்படம், தேர்தல் தோல்வி காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள செய்திகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் குறித்த வதந்திகளின் உண்மைத் தன்மை என்ன என்பதை ஆராய்ந்தோம். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறும் என்பதே தற்போதைய நிலவரம்.

பட்ஜெட்

600 கோடி பட்ஜெட் மற்றும் சம்பள விவரம்

சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், தமிழ் சினிமாவின் மிக விலையுயர்ந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் தலா 180 முதல் 220 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் நெல்சனுக்கு சுமார் 70 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த பட்ஜெட்டில் பெரும்பகுதி நட்சத்திரங்களின் சம்பளத்திற்கே செல்வதாகவும் சினிமா வட்டாரங்கள் பகிர்கின்றன. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது. தற்போது முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement