Page Loader
முதல் முறையாக கமலுடன் இணையும் ரஜினி? இயக்குனர் இவரா?
மீண்டும் இணைகிறார்களா ரஜினியும், கமலும்?

முதல் முறையாக கமலுடன் இணையும் ரஜினி? இயக்குனர் இவரா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 05, 2023
05:15 pm

செய்தி முன்னோட்டம்

இன்று காலை முதல் இணையத்தில் தீவிரமாக பரவும் ஒரு செய்தி, லோகேஷ் கனகராஜ் உடன், தனது அடுத்த படத்தில் இணையப்போகிறார் ரஜினிகாந்த் என்பது தான். இதற்கான முதற்கட்ட மீட்டிங் இந்த வாரத்தில் நடக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதில் மற்றொரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், இந்த படத்தை, தயாரிக்க போவது, கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்னஷனல்' எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. பல தசாப்தங்களுக்கு பிறகு, தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் இணைய போகும் அந்த செய்தியின் அதிகார பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது, லோகேஷ் கனகராஜ், சென்னையில் நடைபெறும் லியோ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ரஜினியோ 'ஜெயிலர்' படத்தின் இருந்து கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கமல்-லோகேஷ்-ரஜினி