ரஜினி-கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு 2027-ல் தொடங்கும் என கூறுகிறார் அனிருத்
செய்தி முன்னோட்டம்
பல தசாப்தங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் 'KH x RK' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தை அனிருத் இசையில் ரெட்ரோ பாடலான 'ஆஜா ராஜா' உடன் மாஸாக அறிவித்தனர். படத்தின் இன்ட்ரோ வீடியோ வைரலான நிலையில் சமீபத்திய ஒரு நேர்காணலில், அனிருத் இரண்டு நட்சத்திரங்களுடன் பணிபுரிந்த அனுபவத்தை 'கற்பனைக்கு அப்பாற்பட்டது' விவரித்தார். மேலும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு அட்டவணை
'KH x RK' படத்தின் படப்பிடிப்பு காலக்கெடுவை அனிருத் கணித்துள்ளார்
இந்தியா டுடே டிஜிட்டல் உடனான ஒரு நேர்காணலில், அனிருத், படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார். "அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று நான் நினைக்கிறேன், அதைச் சுற்றி நிறைய பரபரப்பும் நிலவுகிறது" என்றார். இரண்டு நட்சத்திரங்களுக்கும் பல மாஸ் பாடல்களை இசையமைத்ததற்காக அறியப்பட்ட அனிருத் ரவிச்சந்தர், இந்த முறை வித்தியாசமான அணுகுமுறையை தேர்ந்தெடுத்தார். ப்ரோமோவின் அதிர்வை நிறைவு செய்ய அவர் ஒரு ரெட்ரோ ஒலியை தேர்ந்தெடுத்தார். வெளியீட்டிற்கு முன்பு தான் சற்று பதட்டமாக உணர்ந்ததாக ஒப்புக்கொண்ட அவர், ரசிகர்களுக்காக மாஸகவும் வணிக ரீதியாகவும் ஏதாவது எதிர்பார்க்கலாமா என்று யோசித்தாராம். இருப்பினும், ஆஜா ராஜாவுக்குக் கிடைத்த நேர்மறையான வரவேற்பால் அவர் நிம்மதியடைந்தார் என கூறியுள்ளார்.